முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெருந்துறையில் 10 ஆயிரம் பேர் கூடி வரவேற்பு; முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தகவல்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  பெருந்துறையில் 10 ஆயிரம் பேர் கூடி வரவேற்பு;  முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தகவல்
x

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெருந்துறையில் 10 ஆயிரம் பேர் கூடி வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூறி உள்ளார்.

ஈரோடு

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெருந்துறையில் 10 ஆயிரம் பேர் கூடி வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூறி உள்ளார்.

10 ஆயிரம் பேர்

ஈரோடு மாவட்டத்துக்கு 2 நாள் பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) வருகிறார். இன்று இரவு ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் இல்லத்தில் தங்குகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) காலை இங்கிருந்து புறப்பட்டு பெருந்துறை செல்கிறார். அங்கு தி.மு.க.வினர் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்து உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் ஈரோட்டுக்கு வருவது தி.மு.க. தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்து உள்ளது. எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பெருந்துறையில் போலீஸ் நிலையம் ரவுண்டானா அருகே உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சுமார் 10 ஆயிரம் பேர் இந்த வரவேற்பில் பங்கேற்று, முதல்-அமைச்சரை வரவேற்க இருக்கிறோம். இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்குகிறார்.

விவசாயிகள்

வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் பெருந்துறை பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அத்திக்கடவு -அவினாசி திட்ட பணிகளை முதல்-அமைச்சர் பார்வையிடுகிறார். அங்கு அத்திக்கடவு-அவினாசி திட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழுவினர் முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கிறார்கள். மேலும், இந்த திட்டத்தில் விடுபட்ட குளங்கள், ஏரிகளை சேர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூறினார்.


Next Story