வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குபோலி சான்று வழங்கிய பெண் மீது வழக்கு
வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு போலி சான்று வழங்கிய பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மதுரை
மதுரை தெற்கு பகுதி வட்டார மோட்டார் வாகன அதிகாரியாக இருப்பவர் சிங்காரவேலு. சம்பவத்தன்று இவர் லைசென்ஸ் மற்றும் ஆர்.சி. புத்தகங்கள் வழங்குவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சோதனை செய்தார். அப்போது அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த ரத்த பரிசோதனை சான்றுகளில் சில போலியானது என்று தெரியவந்தது. இதுகுறித்து அவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பை-பாஸ் ரோடு அருள்நகரில் உள்ள ஜெராக்ஸ் கடையில் இருந்து போலி சான்றிதழ் வழங்கியது தெரியவந்தது. அதன்பேரில் போலியான சான்றுகள் தயாரித்து வழங்கியதாக பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த பிரபா வசந்தகுமாரி (வயது 37) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story