குண்டும், குழியுமான சாலைகளை சரிசெய்யக்கோரி பா.ஜனதாவினர் நாற்று நடும் போராட்டம்
குண்டும், குழியுமான சாலைகளை சரிசெய்யக்கோரி பா.ஜனதாவினர் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி
ஊட்டி
ஊட்டி நகரில் சாலைகள் பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக இருக்கிறது. எனவே அந்த சாலைகளை சரிசெய்ய வலியுறுத்தியும், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பா.ஜ.க. சாா்பில் எட்டின்ஸ் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு நீலகிரி மாவட்ட பா.ஜ.க. தலைவா் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்ஸ்பெக்டர்கள் மணிக்குமார், நாகமணி தலைமையிலான போலீசார் கைது செய்து வாகனத்தில் கொண்டு சென்று தனியார் திருமண்டபத்தில் அடைத்தனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story