சேதமடைந்த சாலையை சீரமைக்க வேணடும்


சேதமடைந்த சாலையை சீரமைக்க வேணடும்
x

ஆலடிக்குமுளை ஊராட்சியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

கரம்பயம்:

ஆலடிக்குமுளை ஊராட்சியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த சாலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலடிக்கு முளை ஊராட்சியில் தாமரைக் குளம் வடகரை என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசித்து வருபவர்கள் தினமும் கூலி வேலை செய்பவர்கள். அன்றாடம் இரவு, பகல் என எந்த நேரத்தில் வேலை கிடைக்கிறதோ, அதை செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர்.தாமரைக்குளம் வடகரையில் உள்ள சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்கள்

இந்த சாலைவழியாக தான் பள்ளிக்கு மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இந்த பகுதி மக்கள் அங்கன்வாடி செல்வதற்கும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலையின் பின்பகுதியில் வயல்களும், தென்னந்தோப்புகளும் இருப்பதால் டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களில் விவசாய இடுபொருட்களை கொண்டு செல்வதற்கும், விளைவித்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கும், இந்த வழியாக சென்று வருகின்றனர்.

விபத்து

இந்த சாலைகள் அமைக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் அந்த சிமெண்டு சாலையில் ஆங்காங்கே உடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் உள்ள பள்ளங்களால் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

சில நேரங்களில் தாமரை குளத்தில் விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story