மீன், இறால் விற்பனை கூடம் அமைக்க வேண்டும்


மீன், இறால் விற்பனை கூடம் அமைக்க வேண்டும்
x

மீன், இறால் விற்பனை கூடம் அமைக்க வேண்டும்

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறில் மீன், இறால் விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரூராட்சி கூட்டம்

தலைஞாயிறு பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் செந்தமிழ்ச்செல்வி பிச்சையன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் குகன், பேரூராட்சி துணைத்தலைவர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தலைஞாயிறு பகுதியில் உள்ள பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்ய, சிட்டா அடங்கல் எடுக்க 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பூண்டி செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்.

மீன், இறால் விற்பனை கூடம்

தலைஞாயிறு பேரூராட்சியில் மீன், இறால் விற்பனை கூடம் அமைக்க வேண்டும். தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் வசிக்கும் ஏழை-எளிய மக்களின் நலன் கருதி பால் கூட்டுறவு சொசைட்டி தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக பிளாஸ்டிக்கை தவிர்ப்பதற்காக கூட்டத்தில் உலோகத்திலான பாட்டில்களில் தண்ணீர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பேப்பர் கப்பிற்கு பதிலாக பீங்கான் கோப்பை பயன்படுத்தப்பட்டது. முடிவில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் குமார் நன்றி கூறினார்.


Next Story