பெண் கோவில் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்


பெண் கோவில் நிர்வாகிக்கு   கொலை மிரட்டல்
x

சாத்தான்குளம் அருகே பெண் கோவில் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேரை வலைவீசி தேடிவருகிந்றனர்.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள அறிவான்மொழி நடுத்தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி சீதாதம்புராட்டி (வயது 53). இவர் அங்குள்ள இசக்கியம்மன் கோவில் நிர்வாகியாக உள்ளார். இந்த கோவிலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதே ஊரைச்சேர்ந்த முருகன் மகன் கணபதி (40), முத்துப்பாண்டி மகன் மின் ஊழியர் சின்னப்பழம் (45) ஆகியோருக்கு இடையே பிரச்சினை இருந்துவந்துள்ளது. இந்நிலையில் அதே ஊரில் அமைக்கப்பட்ட கோவில் நுழைவு வாயில் கல்வெட்டை கணபதியும், சின்னப்பழமும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த சீதாதம்புராட்டி தட்டிக்கேட்டு தடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த இருவரும் அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து விட்டுதப்பி ஓடிவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்சன் வழக்குப்பதிவு செய்து அந்த இருவரையும் தேடி வருகிறார்.


Next Story