போலீஸ் ஏட்டு மனைவிக்கு கொலை மிரட்டல்


போலீஸ் ஏட்டு மனைவிக்கு  கொலை மிரட்டல்
x

சங்கரன்கோவில் போலீஸ் ஏட்டு மனைவிக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வருபவர் திரு.வி.க. தெருவை சேர்ந்த இசக்கி முத்துக்குமார். இவரது மனைவி சங்கரேஸ்வரி (வயது 33). இந்தநிலையில் திரு.வி.க. தெரு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் சத்தியமூர்த்தி, சங்கரநாராயணன் மகன் சோலைவேல் (24), ஓடத்தெருவை சேர்ந்த உதயா ஆகிய 3 பேரும் இசக்கி முத்துக்குமார் மனைவி சங்கரேஸ்வரியிடம், உங்கள் கணவர் எங்களை பற்றி போலீஸ் நிலையத்தில் அவதூறாக அடிக்கடி புகார் கொடுத்து வருகிறார், எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சங்கரேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோலைவேலை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.



Next Story