தேர்க்கன்குளத்தில் கல்குவாரி பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை


தேர்க்கன்குளத்தில் கல்குவாரி பணியாளர்களுக்கு   மருத்துவ பரிசோதனை
x

தேர்க்கன்குளத்தில் கல்குவாரி பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தேர்க்கன்குளத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரி பணியாளர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் மூலம் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

ஆழ்வார்திருநகரி மருத்துவ அலுவலர் பாபு தலைமையில் மருத்துவ குழுவினர் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். 16பேர்களுக்கு பரிசோதனை நடத்தியதில் 5பேர்களுக்கு அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இதில் சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், ஆஷா பணியாளர் வள்ளி கலந்து கொண்டனர்.


Next Story