தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
தூத்துக்குடியில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சந்தீஸ் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் ரபி சுஜின் ஜோஸ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர் முத்தையாபுரம் சாமி நகரைச் சேர்ந்த அந்தோனி மகன் ஆரோக்கிய ஜோதி (40) என்பதும், அவர் அப்பகுதியில் வந்துகொண்டிருந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆரோக்கிய ஜோதியை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆரோக்கிய ஜோதி மீது ஏற்கனவே முத்தையாபுரம், சிப்காட் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய ேபாலீஸ் நிலையங்களில் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.