வாக்காளர்களுக்குபணம் -பரிசு பொருட்கள் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்;தே.மு.தி.க. துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டி


வாக்காளர்களுக்குபணம் -பரிசு பொருட்கள் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்;தே.மு.தி.க. துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டி
x

வாக்காளர்களுக்கு பணம் -பரிசு பொருட்கள் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்று மாநில தே.மு.தி.க. துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.

ஈரோடு

வாக்காளர்களுக்கு பணம் -பரிசு பொருட்கள் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்று மாநில தே.மு.தி.க. துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.

மீண்டும் இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கட்சியின் மாநில துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நேற்று ஈரோடு மணல்மேடு, சூரம்பட்டி வலசு நால்ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு முரசு சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.

முன்னதாக எல்.கே.சதீஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தே.மு.தி.க. வேட்பாளர் இதே பகுதியை சேர்ந்தவர். அவர் நல்ல முறையில் செயல்படுவார். ஆனால் எதிர் தரப்பில் உள்ள வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னையில் இருக்கிறார். வெற்றி பெற்றால் அவரால் வர முடியாது. என்னை பொறுத்தவரை 2024 நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுவார். அதனால் இந்த பதவியை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா செய்வார். அதனால் மீண்டும் இங்கு ஒரு இடைத்தேர்தல் வரும். அதற்கு வாய்ப்பு தர வேண்டாம். அதனால் முரசு சின்னத்திற்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும்.

பணம் -பரிசு பொருட்கள்

வாக்காளர்களுக்கு அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இருவரும் பணம், பரிசு பொருட்கள் கொடுக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதனை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாடு மீனவர் கர்நாடகாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை தே.மு.தி.க. வன்மையாக கண்டிக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story