தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி 2 ஆயிரம் குறு, சிறு நிறுவனங்கள் வேலைநிறுத்தம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி 2 ஆயிரம் குறு, சிறு நிறுவனங்கள் வேலைநிறுத்தம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி சுமார் 2 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.
வேலைநிறுத்தம்
தமிழ்நாடு மின்வாரியம் உயர்த்தி உள்ள 430 சதவீத நிலை மின்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பீக் ஹவர் கட்டணம், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.
2 ஆயிரம் நிறுவனங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்ந்த 12 சங்கங்கள் உள்ளன. இதில் மூன்று சங்கங்கள் மட்டுமே நேற்றைய வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. மாவட்டத்தில் மொத்தம் 7 ஆயிரம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 2 ஆயிரம் நிறுவனங்கள் மட்டுமே நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. இதன் காரணமாக பல்வேறு உதிரி பாகங்கள், தளவாடங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.