போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருவாரூர்
திருத்துறைப்பூண்டியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் துறை சார்பில் நடந்தது. நிகழ்ச்சிக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாவதை கண்கூடாக பார்க்கிறோம். அவ்வாறு போதை பொருட்களுக்கு அடிமையாகும் நபர்களிடம் மாணவர்கள் போதையின் தீமைகளை எடுத்துக்கூற வேண்டும்' என்றார். நிகழ்ச்சியில் தூய அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் வின்சென்ட் ஆரோக்கியராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story