புகையிலை கட்டுப்பாடு விழிப்புணர்வு கூட்டம்


புகையிலை கட்டுப்பாடு விழிப்புணர்வு கூட்டம்
x

சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் புகையிலை கட்டுப்பாடு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று தூத்துக்குடி மாவட்ட புகையிலை கட்டுப்பாடு மையம் மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக புகையிலை கட்டுப்பாடு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கல்லூரியின் பொறுப்பு முதல்வர் ரா. ஜமுனா ராணி முன்னிலை வகித்தார். மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகர் வ. ரொசரி பாத்திமா சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால் ஆபிரகாம், சுகாதார ஆய்வாளர்கள் கிறிஸ்டோபர், ஜெய பால், அகிலன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். சுகாதார ஆய்வாளர் மந்திரராஜன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் உமாபாரதி, வளர்மதி ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story