புகையிலை ஒழிப்பு தின பேரணி


புகையிலை ஒழிப்பு தின பேரணி
x

சங்கரன்கோவிலில் புகையிலை ஒழிப்பு தின பேரணி நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலம் நல் ஆலோசனை திருப்பணி குழு சார்பில் சங்கரன்கோவிலில் புகையிலை ஒழிப்பு தின பேரணி நடந்தது. சேகர தலைவர் கிங்ஸ்லி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். நல் ஆலோசனை திருப்பணி குழு இயக்குனர் ஆமோஸ் முன்னிலை வகித்தார். சங்கரன்கோவில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாசன் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சங்கரன்கோவில்- ராஜபாளையம் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் இருந்து கிளம்பிய இந்த பேரணி நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று பஸ் நிலையத்தை வந்தடைந்தது. தொடர்ந்து பஸ் நிலையத்தில் புகையிலை விழிப்புணர்வு குறித்த காெணாலி காட்சி திரையிடப்பட்டது. பேரணியில் பலர் கலந்து கொண்டனர்.


Next Story