புகையிலை பொருட்கள் பதுக்கி விற்ற மளிகை கடைக்கு சீல்


புகையிலை பொருட்கள் பதுக்கி விற்ற மளிகை கடைக்கு சீல்
x

தர்மபுரி அருகே புகையிலை பொருட்கள் பதுக்கி விற்ற மளிகை கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் வெள்ளோலை பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே நகுலன் என்பவர் மளிகை கடை நடத்தி வந்தார். அந்த கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மதிகோன்பாளையம் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையிலான உணவு பாதுகாப்பு துறையினர், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் அங்கு கடையில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து கடை உரிமையாளர் நகுலனிடம் உணவு பாதுகாப்புத்துறையினர் விசாரணை நடத்தி ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதை தொடர்ந்து அந்த மளிகை கடைக்கு சீல் வைக்கப்பட்டது.


Next Story