விழுப்புரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது
விழுப்புரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம் முத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்று நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்த முயன்றனர். அப்போது அந்த கடையின் உரிமையாளரான விழுப்புரம் முத்தோப்பு அகரம்பாட்டை பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 62) சப்-இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமியை அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்தார். இதையடுத்து ஈஸ்வரனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.3,200 மதிப்புள்ள ஒரு கிலோ புகையிலை பொருட்க ளை பறிமுதல் செய்தனர்.
மேலும் விழுப்புரம் பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக ஆயந்தூரை சேர்ந்த மனோன்மணி (65), கோழிப்பட்டு சிவக்குமார் (40), தனசேகர் (49) ஆகியோரை காணை போலீசாரும், குமாரக்குப்பத்தை சேர்ந்த நடராஜன் (55) என்பவரை வளவனூர் போலீசாரும் கைது செய்தனர்.