காரில் கடத்திய புகையிலை பொருள், ரூ.6 லட்சம் பறிமுதல்


காரில் கடத்திய புகையிலை பொருள், ரூ.6 லட்சம் பறிமுதல்
x

நாட்டறம்பள்ளி அருகே காரில் கடத்திய புகையிலை பொருள் மற்றும் ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தான் மானில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

புகையிலை பொருள்

நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்- இன்ஸ்பெக்டர்கள் முனிரத்தினம், நந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி அருகே உள்ள ஆத்தூர்குப்பம் பகுதியில், வாணியம்பாடியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தவழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1,200 ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ.5 லட்சத்து 90 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.6 லட்சம் பறிமுதல்

இதனையடுத்து காரை ஓட்டி சென்ற வாலிபரை பிடித்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தனராம் என்பவரது மகன் சாட்டராம் (வயது 34) என்பதும், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் மளிகைக் கடை நடத்தி வருவதும் தெயி வந்தது.

மேலும் தனக்கு சொந்தமான காரில் பெங்களூரில் இருந்து, ஹான்ஸ் பாக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளுக்கு வினியோகம் செய்ததும். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் 1,200 ஹான்ஸ் பாக்கெட்டுகள், ரொக்கம் ரூ.5.90 லட்சம் ஆகியவற்றை காருடன் பறிமுதல் செய்தனர்.


Next Story