ரூ 5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


ரூ 5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

கண்டாச்சிபுரத்தில் போலீசார் வாகன சோதனை: ரூ 5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் அண்ணன் தம்பி உள்பட 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

கண்டாச்சிபுரம் ஒதியத்தூர் கிராமத்தின் அருகே உள்ள திருமால்ராயபுரம் என்ற இடத்தில் கண்டாச்சிபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 2 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து சரக்கு வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் அரகண்டநல்லூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது 44), இவரது அண்ணன் மூர்த்தி(47) என்பதும், புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனைக்கு கொண்டு சென்றபோது போலீசாரிடம் சிக்கியதும், இதற்கு அவர்களின் தம்பி கார்த்திக்(42) என்பவர் உடந்தையாக இருந்ததும் தொியவந்தது.

இதைத் தொடர்ந்து மணிகண்டன் வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை செய்தபோது அங்கு 16 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மணிகண்டன் உள்பட 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.


Next Story