புகையிலை பொருட்களைபதுக்கிய கடைக்காரர் கைது
எட்டயபுரத்தில் விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கிய கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, எட்டயபுரம் பஜார் பகுதியில் பெட்டிக் கடையில் சோதனையிட்டனர். அந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடைக்காரர் மந்திரமூர்த்தியை(வயது 57) போலீசார் கைது செய்தனர். அவரது கடையில் இருந்து 70 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ரூ.6 ஆயிரத்து 500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மந்திரமூர்த்தி மீது ஏற்கனவே எட்டயபுரம் போலீஸ் நிலையத்தில் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story