புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கோவிலம்மாள்புரத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக களக்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் கோவிலம்மாள்புரம், தெற்கு தெருவை சேர்ந்த சுடலைக்கண்ணு (வயது 30) என்பவரின் கடையை சோதனை செய்தனர். அப்போது, கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து சுடலைகண்ணுவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 900 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story