மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறைகலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்


மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறைகலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்
x

மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொிவித்துள்ளாா்.

ஈரோடு

சுதந்திர தினத்தையொட்டி மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுக்கடைகள், அதனுடன் செயல்படும் பார்கள், கிளப், ஓட்டல்களில் இயங்கும் பார்கள் ஆகியவற்றுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை விடப்பட வேண்டும். அன்றைய தினம் மது விற்பனை நடைபெறாது. மேலும், மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.


Related Tags :
Next Story