இன்று முப்பெரும் விழா


இன்று முப்பெரும் விழா
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை நாடார் வாலிபர் சங்கம் சார்பில் இன்று நடைபெறும் முப்பெரும் விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொள்கிறார்

தென்காசி

சுரண்டை:

சுரண்டை நாடார் வாலிபர் சங்கம் சார்பில் காமராஜர் அரங்கம் புதிய கட்டிட திறப்பு விழா, நாடார் வாலிபர் சங்க 33-வது ஆண்டு விழா மற்றும் மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது. விழாவிற்கு நாடார் வாலிபர் சங்க கவுரவ தலைவர் எஸ்.வி.கணேசன் தலைமை தாங்குகிறார். சிவகுருநாதபுரம் இந்து நாடார் உறவின்முறை மகமை கமிட்டி டிரஸ்ட் நாட்டாண்மை தங்கையா நாடார் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொள்கிறார்.

விழா ஏற்பாடுகளை கவுரவ தலைவர் எஸ்.வி.கணேசன் தலைமையில் நாடார் வாலிபர் சங்க தலைவர் ரத்தின நாடார், பொருளாளர் ராஜேந்திரன், செயலாளர் ராமர், துணைத்தலைவர் ஜெயக்குமார், துணைச்செயலாளர் முருகன் ஆகியோர் செய்துள்ளனர்.


Next Story