முதியோர் அவசர உதவிக்கு கட்டணமில்லாத எண்


முதியோர் அவசர உதவிக்கு கட்டணமில்லாத எண்
x

தூத்துக்குடி மாவட்டத்தில் முதியோர் அவசர உதவிக்கு கட்டணமில்லாத உதவி எண் வெளியிடப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை தாங்கி உறுதி மொழியை வாசிக்க, அரசு அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து முதியோர் அவசர உதவிக்காக 14567 என்ற கட்டணமில்லா உதவி எண்ணையும் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் ரதிதேவி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, சிரஸ்தார் இளங்கோ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story