ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்


ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்
x
தினத்தந்தி 8 Jun 2023 12:15 AM IST (Updated: 8 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் தகவல்

மயிலாடுதுறை


ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக புகார் அளிக்க, இலவச தொலை பேசி எண், மாநில சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசாரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு, ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறது. இவற்றை சிலர் முறைகேடாக கடத்தி, கள்ளச்சந்தையில் விற்று, அதிக லாபம் பெறும் நோக்கில் செயல்படுகின்றனர். இவர்கள் பற்றியும், ரேஷன் பொருட்கள் பதுக்கல் குறித்தும் பொதுமக்கள் 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ரகசியம் காக்கப்படும். இதற்காக, மாநில சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசில், 24 மணி நேரமும் செயல்படும், போலீஸ் கட்டுப்பாட்டுஅறை திறக்கப்பட்டு உள்ளது. இது போலீஸ் ஐ.ஜி. காமினியின் நேரடி கண்காணிப்பில் செயல்படுகிறது என்று மயிலாடுதுறை மாவட்ட சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story