கொடைரோடு சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு


கொடைரோடு சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு
x

கொடைரோடு சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

திண்டுக்கல்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதில் கார், வேன், ஜீப் போன்ற வாகனங்களுக்கும், இலகுரக வாகனங்களுக்கும் ஒருமுறை, பலமுறை பயன்பாட்டிற்கான கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. பலமுறை பயன்பாட்டிற்கான மாதாந்திர கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. கொடைரோடு சுங்கச்சாவடியில் உயர்த்தப்பட்ட கட்டண விவரம் வருமாறு:-

கார், வேன், ஜீப் பல முறை பயன்பாட்டிற்கு மாதாந்திர கட்டணம் ரூ.2,250. இலகுரக வாகனங்கள் பல முறை பயன்பாட்டிற்கு மாதாந்திர கட்டணம் ரூ.3,935 என உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் பஸ், டிரக் ஒரு நாளில் பல முறை பயன்பாட்டிற்கு ரூ.395, பல முறை பயன்பாட்டிற்கு மாதாந்திர கட்டணம் ரூ.7,870, பல அச்சு கொண்ட வாகனம் ஒரு முறை பயன்பாட்டிற்கு ரூ.420, ஒரு நாளில் பல முறை பயன்பாட்டிற்கு ரூ.630, பல முறை பயன்பாட்டிற்கு மாதாந்திர கட்டணம் ரூ.12,650 என உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டுனர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story