நாங்குநேரி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு


நாங்குநேரி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு
x

நாங்குநேரி சுங்கச்சாவடியில் வாகனங்கள் கடந்து செல்வதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

நாங்குநேரி:

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கடந்து செல்வதற்கான கட்டணம் நேற்று முதல் உயர்த்தப்பட்டு உள்ளது.

அதன்படி நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடியில் வாகனங்கள் கடந்து செல்வதற்கான கட்டணம் நேற்று முதல் உயர்த்தப்பட்டு உள்ளது. கார், ஜீப், வேன் போன்ற இலகு ரக வாகனங்களுக்கு ஒரு முறை பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.110 என்றும், அந்த வாகனங்கள் 24 மணி நேரத்துக்குள் திரும்பி வருவதற்கான பயன்பாட்டு கட்டணம் ரூ.160 என்றும், மாத பயன்பாட்டு கட்டணம் (50 தடவை) ரூ.3,605 என்றும் உயர்த்தப்பட்டு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.



Next Story