தக்காளி விலை கிலோ ரூ.140 ஆக உயர்வு


தக்காளி விலை கிலோ ரூ.140 ஆக உயர்வு
x
தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.120-ல் இருந்து ரூ.140 ஆக உயர்ந்தது. மிளகாய், சின்ன வெங்காயம் சற்று குறைந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.120-ல் இருந்து ரூ.140 ஆக உயர்ந்தது. மிளகாய், சின்ன வெங்காயம் சற்று குறைந்தது.

தக்காளி விலை உயர்வு

தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாகவே அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதில் காய்கறிகள் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. அதிலும் சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி, மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம் உள்ளிட்டவை தங்கத்தின் விலையை போல தினமும் அதிகரித்து வருகிறது.

குமரி மாவட்ட மொத்த மார்க்கெட்டுகளில் கடந்த மாதம் தொடக்கத்தில் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி திடீரென 3 மடங்கு விலை உயர்ந்தது. ஜூலை மாதம் தொடக்கத்தில் இருந்து ஒரு கிலோ தக்காளி ரூ.140 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் தக்காளி விலை சரிவடைந்து ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் விலை ரூ.20 உயர்ந்து 3 நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை ஆனது. அது மேலும் ரூ.20 உயர்ந்துநேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.140-க்கு விற்பனையானது.

வெண்டைக்காய்- பீட்ரூட் விலை ஏறுமுகம்

இதேபோல ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பீட்ரூட் நேற்று ரூ.45-க்கும், ரூ.60-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.80-க்கும் விற்கப்பட்டது.

அதேசமயம் இஞ்சி கடந்த ஒரு வாரமாக ஒரு கிலோ ரூ.280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி விலை தொடந்து உயா்ந்து வருவதால், இல்லத்தரசிகள் வேதனையடைந்துள்ளனர். காய்கறிகளின் விலை ஏற்றத்தால் சாமானிய மக்களின் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காய்கறி விலை நிலவரம்

நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் (ஒரு கிலோ) வருமாறு:-

உருளைக்கிழங்கு-ரூ.30, பல்லாரி-ரூ.30, சின்ன வெங்காயம்-ரூ.130, தடியங்காய்-ரூ.35, புடலங்காய்-ரூ.30, வெள்ளரிக்காய்-ரூ.40, பீட்ரூட்- ரூ.45, மிளகாய்- ரூ.100, சேனைக்கிழங்கு- ரூ.70, நாட்டு கத்தரிக்காய்- ரூ.60, வாி கத்தரிக்காய்- ரூ.35, முட்டைக்கோஸ்- ரூ.30, இஞ்சி-ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டது.


Next Story