சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.10 குறைவு..!
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தக்காளியின் விலை தங்கத்தின் விலையைப்போல் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. இதனால் தக்காளி வாங்கும் அளவை குறைக்க வேண்டிய நிலைக்கு இல்லத்தரசிகள் தள்ளப்பட்டனர். அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.200 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையை தொடங்கியது.
இந்த நிலையில், இன்று கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை ரூ.10 குறைந்து ஒரு கிலோ ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.100-க்கு விற்க்கப்பட்ட நிலையில் இன்று ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவீன் தக்காளி கிலோ ரூ.100-க்கும், வெங்காயம் ரூ.22-க்கும் உருளை ரூ.33-க்கும், சின்ன வெங்காயம் ரூ.80-க்கும், ஊட்டி கேரட் ரூ.60-க்கும், பீன்ஸ் ரூ.50-க்கும், ஊட்டி பீட்ரூட் ரூ.40-க்கும், வெண்டைக்காய் ரூ.30-க்கும், சேனைக்கிழங்கு ரூ. 44-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.