அன்னவாசல் பகுதியில் தக்காளி விலை குறைவு
அன்னவாசல் பகுதியில் தக்காளி விலை குறைந்துள்ளது.
புதுக்கோட்டை
இலுப்பூர், அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து கிலோ ரூ.50-க்கு மேல் விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். இதனால் வீடுகளுக்கு கிலோ கணக்கில் வாங்கும் இல்லத் தரசிகள் கால் கிலோ, அரை கிலோ என வாங்கி வந்தனர். இந்த நிலையில் தற்போது சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அன்னவாசல் முக்கண்ணாமலைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வாகனங்களில் 3 மற்றும் 4 கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனையாகிறது
Related Tags :
Next Story