சென்னை, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி.!


சென்னை, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி.!
x

தக்காளியின் வரத்து அதிகரிப்பால், விலை கடும் சரிவை சந்தித்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

சென்னை,

சென்னை, கோயம்பேடு சந்தைக்கு வெளி மாநிலங்களில் இருந்து, தினசரி சுமார் ஆயிரத்து 100 டன் தக்காளி வருவது வழக்கம். இந்நிலையில், தக்காளி தற்போது கூடுதலாக, ஆயிரத்து 400 டன் முதல் ஆயிரத்து 500 டன்கள் வந்துள்ளன.

தக்காளிகளின் வரத்து அதிகரித்துள்ளதால், விலையும் கடுமையாக சரிந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை மேலும் சரியக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று மேலும் விலை குறைந்து கிலோ ரூ.6க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 15 கிலோ பெட்டி 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று வெறும் 100 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளியின் வரத்து அதிகரிப்பால், விலை கடும் சரிவை சந்தித்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தக்காளி விலை குறைவு இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story