பனி காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்தது
ராதாபுரம் பகுதியில் பனி காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்து உள்ளது.
திருநெல்வேலி
ராதாபுரம்:
ராதாபுரம் மற்றும் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயிகள், தக்காளி சாகுபடி செய்து வருகிறார்கள். இங்கு விளைவிக்கப்படும் தக்காளி அருகில் உள்ள காவல்கிணறு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக ராதாபுரம் பகுதியில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக தக்காளி செடிகள் கருகி வருகிறது. விளைச்சலும் குறைந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனையாவதால் ேவதனையில் உள்ளனர்.
Related Tags :
Next Story