தக்காளி விலை ரூ.60-க்கு விற்பனை


தக்காளி விலை ரூ.60-க்கு விற்பனை
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகா்கோவிலில் ரேஷன் கடைகளில் ரூ.60-க்கு விற்கப்பட்ட தக்காளியை பெண்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகா்கோவிலில் ரேஷன் கடைகளில் ரூ.60-க்கு விற்கப்பட்ட தக்காளியை பெண்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

ரேஷன் கடைகளில் தக்காளி

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே தக்காளி வரலாறு காணாத வகையில் விலை உயர்வை சந்தித்தது. ஒரு கிலோ தக்காளி சில்லரை கடைகளில் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அந்த வகையில் ரேஷன் கடைகள் மூலமாக தக்காளியை மார்க்கெட் விலையைவிட குறைவான விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி நாகர்கோவிலிலும் ரேஷன் கடைகளில் கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி முதல் தக்காளி விற்பனை ெ்சய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்தின் கீழ் 448 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக நாகர்கோவிலில் உள்ள கடைகளில் தக்காளி விற்பனை நடக்கிறது. அதாவது கூட்டுறவு சங்கங்களுக்கு கிடைக்கும் தக்காளியை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேசமணிநகர், மறவன்குடியிருப்பு, கீழ மறவன்குடியிருப்பு, கலைநகர், புன்னைநகர், தளவாய்புரம் மற்றும் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே, ஊட்டுவாழ்மடம் ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நடந்தது.

போட்டி போட்டு...

இந்த நிலையில் நேற்று கோட்டார் வாகையடி தெருவில் உள்ள ரேஷன் கடையில் தக்காளி விற்பனை நடந்தது. அந்த ரேஷன் கடைக்கு 20 கிலோ தக்காளி வழங்கப்பட்டது. அதை ஒரு நபருக்கு அரை கிலோ வைத்து விற்பனை செய்யப்பட்டது. அரை கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் தக்காளியை போட்டி போட்டு வாங்கினர். இதன் காரணமாக ரேஷன் கடையில் தக்காளி விற்பனை தொடங்கிய ½ மணி நேரத்தில் விற்று தீர்ந்தன.

மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய்க்கு விற்பனை ஆகும் நிலையில் ரேஷன் கடையில் வெறும் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால் ஓரிரு ரேஷன் கடைகளில் மட்டும் தக்காளி விற்பனை நடப்பதால் அனைத்து மக்களுக்கும் குறைந்த விலை தக்காளி சென்று சேரவில்லை. எனவே அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story