உச்சத்தில் இருந்து வீதிக்கு வந்த தக்காளி


உச்சத்தில் இருந்து வீதிக்கு வந்த தக்காளி
x
தினத்தந்தி 4 Oct 2023 9:30 PM GMT (Updated: 4 Oct 2023 9:30 PM GMT)

விலை வீழ்ச்சியால் உச்சத்தில் இருந்த தக்காளி வீதிக்கு வந்தது இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம், பொருளூர், புல்லாக்கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தக்காளியை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் தக்காளிகளை விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்காக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்கின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே தக்காளி வரத்து அதிகரித்ததால் அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் சாகுபடி, களையெடுத்தல், பறிப்பு கூலி, வண்டி வாடகைக்கு கூட விலை கிடைக்காததால் விவசாயிகள் தக்காளிகளை சாலையோரமும், வீதிகளிலும் தக்காளியை கொட்டி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன்படி, நேற்று ஒட்டன்சத்திரம் மார்க்கெட் அருகில் சாலையோரம் அதிக அளவில் தக்காளி கொட்டப்பட்டிருந்தன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனையாகி உச்சத்தில் இருந்தது. தற்போது விளைச்சல் அதிகரித்து, விலை வீழ்ச்சியடைந்ததால் தக்காளி விலைபோகாமல் வீதிக்கு வந்துவிட்டது. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.5-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


Next Story