ஈரோட்டில் தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்பனை


ஈரோட்டில் தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்பனை
x

ஈரோட்டில் தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்பனையானது. வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது.

ஈரோடு

ஈரோடு:

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்படும் தற்காலிக தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தாளவாடி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்காக மொத்தமாக கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்த பலத்த மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்தது. இதனால் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து, ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில் தக்காளியின் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் விலையும் படிப்படியாக குறைந்தது. நேற்று சுமார் 15 டன் தக்காளி வரத்தானது. இதனால், தக்காளியின் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது.


Related Tags :
Next Story