திருப்பூரில் தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனை


திருப்பூரில் தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனை
x

ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனை

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மிரண்டு போயுள்ளனர்.

மழையால் பாதிப்பு

திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு காய்கறிகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் மாநகரில் இது பிரதான மார்க்கெட்டாக உள்ளது.

சமீப காலமாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து இந்த மார்க்கெட்டிற்கு மிக குறைந்த அளவிலேயே தக்காளி வரத்து உள்ளது. சாதாரணமாக தினசரி சுமார் 25 முதல் 30 டன் தக்காளி வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது சுமார் 5 முதல் 7 டன் வரை மட்டுமே தக்காளி வரத்து உள்ளது. இதன் காரணமாக தற்போது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு தக்காளி தட்டுப்பாடு இருப்பதால் இதன் விலை அதிகரித்துள்ளது.

ரூ.90-க்கு விற்பனை

நேற்று மொத்த விற்பனை மார்க்கெட்டில் 27 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.1,800 முதல் ரூ.2000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே சில்லரை விலையாக கடைகளில் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ராக்கெட் வேகத்தில் தக்காளி விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் மிரண்டு போயுள்ளனர்.

இன்னும் விலை உயருமோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் உள்ளது. சமையலில் தக்காளியின் பங்கு முக்கியமானதாக இருப்பதால் இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு கவலை தரும் விஷயமாக உள்ளது. விலை உயர்வு காரணமாக தக்காளி பயன்படுத்துவதை பெண்கள் குறைத்து வருகின்றனர். பெரும்பாலான வீடுகளில் ரசத்தில் தக்காளிக்கு பதில் புளியை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த விலை உயர்வு இதே வேகத்தில் சென்றால் வீடு, ஓட்டல்களில் தக்காளி சட்டினியை பார்ப்பதே அரிதாகி விடுமோ என்ற கவலையும் தக்காளி பிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.


Related Tags :
Next Story