ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்பனை
ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்பனை
திருப்பூர்
வெள்ளகோவில்
வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது. இந்த சந்தைக்கு விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கி செல்வார்கள்.
அதன்படி நேற்றுநடந்த வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.20, கத்தரிக்காய் ரூ.60, பீர்க்கங்காய் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.40,சின்ன வெங்காயம் ரூ.80, உருளைக்கிழங்கு ரூ.40, பீட்ரூட் ரூ.60, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.60, பாவற்காய் ரூ.60, பச்சை மிளகாய் ரூ.80, வெண்டைக்காய் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
--
Related Tags :
Next Story