நாளை 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் பணிக்கான தேர்வு


நாளை 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் பணிக்கான தேர்வு
x

108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் பணிக்கான தேர்வு மணப்பாறையில் நாளை நடக்கிறது.

திருச்சி

108 ஆம்புலன்சில் அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான 150 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு மணப்பாறை பழைய காமராஜர் அரசு தலைமை மருத்துவமனையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை நடக்கிறது. மருத்துவ உதவியாளர் தேர்வுக்கு 19 முதல் 30 வயதுக்குள்ளும், பி.எஸ்சி. நர்சிங், டி.எம்.எல்.டி., ஏ.என்.எம். படித்து இருக்க வேண்டும் அல்லது லைப் சயின்ஸ் படிப்புகளில் ஏதாவது ஒருபிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். ஓட்டுனர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் மற்றும் அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 24 முதல் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்த பட்சம் 1 ஆண்டு நிறைவு பெற்று இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்கள் 12 மணிநேர இரவு மற்றும் பகல் ஷிப்ட் முறைகளில் தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவர். தேர்வுக்கு வருபவர்கள் கல்வித்தகுதி, ஓட்டுனர் உரிமம், முகவரி சான்று, அடையாளச்சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வர வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு தெரிவித்துள்ளார்.


Next Story