முசிறி, மணப்பாறை, வாழவந்தான்கோட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
முசிறி, மணப்பாறை, வாழவந்தான்கோட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
முசிறி:
முசிறி கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான கைகாட்டி, பார்வதிபுரம், சிங்காரச்சோலை, புதிய பஸ் நிலையம், சந்தா பாளையம், ஹவுசிங் யூனிட், சிட்டிலரை, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, தும்பலம், அழகாபட்டி, சிலோன் காலனி, வடுகப்பட்டி, காமாட்சிபட்டி, தண்டலைபுத்தூர், வேலகாநத்தம், அந்தரப்பட்டி, தொப்பளாம்பட்டி, திருச்சி ரோடு, துறையூர் ரோடு, மணமேடு, கோடியம்பாளையம், அலகரை, கருப்பனாம்பட்டி, சிந்தம்பட்டி, சீனிவாசநல்லூர், திருஈங்கோய்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாைள காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை வினியோகம் இருக்காது என்று மின்வாரிய இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் மேரி மேக்டலின் பிரின்சி தெரிவித்துள்ளார்.
இதேபோல் மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குப்பட்டி, பொய்கைப்பட்டி, வீரப்பூர், கொட்டபட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, வேங்கைகுறிச்சி, மலையடிப்பட்டி, பூசாரிபட்டி, ஆண்டவர்கோவில், கள்ளிப்பட்டி, முத்தப்புடையான்பட்டி, காட்டுப்பட்டி, மில் காலனி, மணப்பாறைபட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, வடுகபட்டி, ராயம்பட்டி, வலையபட்டி, எப்.கீழையூர், சின்னமணப்பட்டி, கே.பெரியபட்டி, வடக்கு சேர்பட்டி, இடையபட்டி, மரவனூர், சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்திகாரன்பட்டி, சித்தகுடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திப்பட்டி, படுகளம் பூசாரிபட்டி, கரும்புளிப்பட்டி, அமயபுரம், குளத்தூராம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், பன்னாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, அமயபுரம், பண்ணபட்டி, தாதமலைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகபட்டி, வீராகோவில்பட்டி, பாலக்கருதம்பட்டி, ராயம்பட்டி, ரெங்ககவுண்டம்பட்டி, வடுகபட்டி (வீட்டு வசதி வாரிய குடியிருப்பு), மணப்பாறை கலிங்கபட்டி, முள்ளிபாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.
மேலும் வாழவந்தான்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஜெய்நகர், திருவேங்கடநகர், கணேசபுரம், கணபதி நகர், கீழகுமரேசபுரம், இம்மானுவேல் நகர், வ.உ.சி. நகர், எழில் நகர், அய்யம்பட்டி, வாழவந்தான் கோட்டை, வாழவந்தான் கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, பெரியார் நகர், ரெட்டியார் தோட்டம், ஈச்சங்காடு, பர்மாநகர், மாங்காவனம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மன்னார்புரம் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.