தாந்தோணிமலை, காணியாளம்பட்டி துணை மின்நிலைய பகுதிகளில் நாளைமறுநாள் மின்நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக தாந்தோணிமலை, காணியாளம்பட்டி துணை மின்நிலைய பகுதிகளில் நாளைமறுநாள் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
மின்நிறுத்தம்
கரூர் கோட்டத்திற்குட்பட்ட தாந்தோணிமலை துணைமின் நிலையத்தில் நாளைமறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ராயனூர், டி.செல்லாண்டிபாளையம், அருகம்பாளையம், காந்திகிராமம், கருப்பகவுண்டன்புதூர், கலெக்டர் ஆபிஸ், கோடங்கிபட்டி, வெடிக்காரன்பட்டி, பாகநத்தம், தாந்தோணிமலை.
சிவசக்தி நகர், சுங்ககேட், திண்ணப்பா நகர், காளியப்பனூர், கணபதிபாளையம், திண்ணப்பா நகர் விஸ்தரிப்பு, முத்தலாடம்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, வெங்கக்கல்பட்டி, ஏமூர், சீத்தப்பட்டி, கத்தாழப்பட்டி, கத்தாழப்பட்டி புதூர், மணவாடி, கன்னிமார்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளைமறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
காணியாளம்பட்டி
இதேபோல் காணியாளம்பட்டி துணைமின் நிலையத்திற்குட்பட்ட முத்துரங்கன்பட்டி பீடரில் நாளைமறுநாள் (சனிக்கிழமை)பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மஞ்சநாயக்கன்பட்டி, பிச்சம்பட்டி, முத்துரங்கன்பட்டி, பழனிசெட்டியூர், சோனம்பட்டி, நல்லமுத்துப்பாளையம், கோமளிப்பட்டி, கோவில்பட்டி, பன்னப்பட்டி, பி.உடையாப்பட்டி, சுண்டுகுழிபட்டி, பாப்பாணம்பட்டி, குளத்தூர் ஆகிய பகுதிகளில் நாளைமறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.