ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை


ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை
x
திருப்பூர்

காங்கயம்:

காங்கயம் வாரச் சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வாரச்சந்தை

காங்கயம் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தை. வாரம் தோறும் திங்கட்கிழமை கூடும். இங்கு 500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள் முதற்கொண்டு அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சந்தைக்கு காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இங்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை சாமான்கள் மற்றும் பொருட்களை வாங்கி செல்வார்கள்.

இதன் காரணமாகவே வாரந்தோறும் திங்கட்கிழமை இந்த பகுதியில் உள்ள விவசாய தொழிலார்கள், தேங்காய் களம், எண்ணெய் ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலார்களுக்கு வார சம்பளத்துடன் விடுமுறை விடப்படுகிறது. இதனால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் நகர பகுதி மக்கள் இந்த சந்தைக்கு வந்து செல்வார்கள்.

தக்காளி

அதன்படி நேற்று கூடிய வார சந்தையில் முதல் தரமான தக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கும், இரண்டாம் தரமான தக்காளி ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை காட்டிலும் தக்காளியின் விலை ரூ.10 குறைந்துள்ளது. இதனால் தக்காளியின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. தக்காளியின் உற்பத்தி குறைவாக உள்ள காரணத்தினால் தக்காளியின் விலை அதிகரித்துள்ளதாகவும், வரும் நாட்களில் இன்னமும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது.


Next Story