வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி


வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி
x
திருப்பூர்


உடுமலை நகராட்சி வாரச்சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை வீழ்ச்சியடைந்துள்ளது

வாரச்சந்தை

உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிக அளவில் உள்ளது. விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையும் தக்காளிகளை உடுமலை ராஜேந்திரா சாலையில் உள்ள நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் உள்ள காய்கறி கமிஷன் மண்டிகளுக்கு கொண்டு வருகின்றனர்.

அங்கு அவை கமிஷன் மண்டி நடத்துகிறவர்களால் ஏலம் விடப்படும். இந்த ஏலத்தில் வியாபாரிகள் கலந்து கொண்டு அவற்றை வாங்கி செல்வார்கள். வியாபாரிகள், இங்கிருந்து கேரள மாநிலத்திற்கும் தக்காளியை வாங்கி செல்கின்றனர்.

விலை வீழ்ச்சி

கடந்த வாரம் 14கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி விலைரூ250க்கு விற்பனை ஆனது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் உடுமலை நகராட்சி வாரச்சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளிலும் தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளதால் வியாபாரிகள் அந்த பகுதிகளுக்கும் தக்காளி வாங்குவதற்கு செல்கின்றனர்.

அதனால் உடுமலை வாரச்சந்தைக்கு தக்காளி வாங்குவதற்குவரும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனால் நேற்று முன்தினம் ஒரு பெட்டி தக்காளி ரூ.210- க்கு விற்பனை ஆனது. இந்த விலை நேற்று ரூ.170ஆக குறைந்தது. நேற்று உடுமலை நகராட்சி வாரச்சந்தையில் உள்ள காய்கறி கமிஷன் மண்டிகளுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தக்காளி பெட்டிகள் விவசாயிகளால் கொண்டு வரப்பட்டிருந்தன. ஆனால் விலையோ வீழ்ச்சியடைந்திருந்தது.


Next Story