சப்-ஜூனியர் பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடம்:திருமணி அரசுப்பள்ளி மாணவிக்கு ரூ.10 ஆயிரம் காசோலை
சப்-ஜூனியர் பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் ெபற்ற திருமணி அரசுப்பள்ளி மாணவிக்கு ரூ.10 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது.
சப்-ஜூனியர் பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் ெபற்ற திருமணி அரசுப்பள்ளி மாணவிக்கு ரூ.10 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது.
இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் சார்பில் 15 வயதுக்கு உட்பட்ட சப்-ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்றது. இதில், காட்பாடி அருகே உள்ள திருமணி அரசு மேல்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி ஆதர்ஷினி கலந்து கொண்டு 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர் இந்திய அளவில் சப்-ஜூனியர் பேட்மிண்டன் பிரிவில் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.
இதையொட்டி மாணவி ஆதர்ஷினியை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பாராட்டி அவருடைய விருப்ப உரிமை நிதியில் இருந்து ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.