திருச்சியில் கொட்டித்தீ்ர்த்த மழை


திருச்சியில் கொட்டித்தீ்ர்த்த மழை
x

திருச்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொட்டித் தீர்த்த மழையால் பகல் பொழுதில் அடித்த வெயிலின் தாக்கம் தணிந்தது.

திருச்சி

திருச்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொட்டித் தீர்த்த மழையால் பகல் பொழுதில் அடித்த வெயிலின் தாக்கம் தணிந்தது.

கொட்டித்தீர்த்த மழை

இந்தாண்டு கோடை காலம் தொடங்கியது முதலே கடும் வெப்பம் சுட்டெரித்தது. பகல் நேரத்தில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இருந்தது. அதன்பிறகு படிப்படியாக கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து, பலத்த காற்று வீசி வந்தது.

தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. பகல்நேரத்தில் வெளியில் சென்றவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். ஒரு சில குழந்தைகளுக்கு வேர்குரு உள்ளிட்ட தோல் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

வெயிலின் தாக்கம் தணிந்தது

பகல் வெப்பத்தின் தாக்கம் இரவிலும் புழுக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் பலர் இரவில் நிம்மதியான தூக்கமின்றி தவித்து வந்தனர். இந்தநிலையில் தொடர்ச்சியாக வெயிலின் தாக்கத்தால் தவித்து வந்த மக்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு, விமோசனம் கிடைத்ததுபோல, திருச்சியில் நேற்று இரவு 9.30 மணிஅளவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடைவிடாது பெய்த மழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் பகல் பொழுதில் அடித்த வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story