சாப்பாடு, தண்ணீர் ஏதும் கொடுக்காமல் கர்ப்பிணி சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்த காதல் கணவர் விருத்தாசலம் போலீஸ் விசாரணை


சாப்பாடு, தண்ணீர் ஏதும் கொடுக்காமல்  கர்ப்பிணி சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்த காதல் கணவர்  விருத்தாசலம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 15 Jun 2022 10:38 PM IST (Updated: 15 Jun 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் கர்ப்பிணிக்கு சாப்பாடு, தண்ணீர் ஏதும் கொடுக்காமல், அவரது உடலில் சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செயத காதல் கணவர் மீது போ லீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள பவழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிராஜ் (வயது 30). இவரது மனைவி சர்மிளா பானு (24). இருவரும் காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது சர்மிளா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் மனைவி மீது சந்தேகப்பட்டு, அவரை மணிராஜ் கொடுமைப்படுத்தி தாக்கி வந்துள்ளார். இதனால், கடந்த 2 மாதத்திற்கு முன்பு கணவரிடம் கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார்.

சித்ரவதை

கடந்த 15 நாட்களுக்கு முன்பு மணிராஜ் அவரை சமாதானம் செய்து தன்னுடன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு, சர்மிளாபானுவுக்கு சாப்பாடு, தண்ணீர் எதுவும் கொடுக்காமல் கொடுமைப்படுத்தியதுடன் சிகரெட்டால் அவரது உடலில் பல்வேறு இடங்களில் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார்.

இதில் காயமடைந்த சர்மிளா பானுவை அவரது உறவினர்கள் மீட்டு மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து சர்மிளா பானு விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் மணிராஜ் மீது இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story