தொழுவனங்குடி கருமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
தொழுவனங்குடி கருமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
திருவாரூர்
திருவாரூர் அருகே தொழுவனங்குடி கருமாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா கடந்த 4-ந்தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் கரகம் எடுத்து வருதல், மகாபிஷேகம், ஆராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று திருவாரூர் கமலாலயம் குளத்திலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி ஊர்வலம் எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அக்னி கப்பரை எடுத்து தொழுவனங்குடி கிராமம் முழுவதும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தொழுவனங்குடி கருமாரியம்மன் கோவில் அறங்காவலர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story