தூத்துக்குடியில் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும்:கலெக்டர் செந்தில்ராஜ்
தூத்துக்குடியில் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா நிறுவனங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் சுற்றுலாத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் இது வரை சுற்றுலாத்துறையில் பதிவு செய்யாமல் பல சுற்றுலா தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
பதிவு
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொடங்க உள்ள சுற்றுலாத் தொழில் நிறுவனங்கள்www.tntourismtors.com என்ற இணையதளம் மூலம் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வழிகாட்டு நெறிமுறைகளை பெறுவதற்கும், கூடுதல் விவரங்களுக்கும் தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை 0461- 2341010, 7397715690 மற்றும் இ-மெயில் முகவரி tothoothukudi @gmail.com மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.