ஆபத்தை உணராமல் குளித்த சுற்றுலா பயணிகள்


ஆபத்தை உணராமல் குளித்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி கடலில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் குளித்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ளது புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடல் பகுதி. அதுபோல் இயற்கையாகவே தனுஷ்கோடி கடல் பகுதி கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் உள்ள பகுதியாகும். அதனால்தான் தனுஷ்கோடி கடல் பகுதியில் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க காவல்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியை காண சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். இவ்வாறு வந்த சுற்றுலா பயணிகள் சிலர் கம்பிப்பாடுக்கும் அரிச்சல் முனைக்கும் இடைப்பட்ட தென்கடல் பகுதியில் ஆபத்தை அறியாமல் குழந்தைகளுடன் கடலில் இறங்கி குளித்தனர். கடல் சீற்றமாக இருப்பது தெரிந்தும் ஆபத்தை அறியாமல் கடலில் இறங்கி அவர்கள் குளித்து கொண்டிருந்தனர்.

இதேபோல் முகுந்தராயர்சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்திற்கு உள்ளேயும் தடையை மீறி சென்று சுற்றுலா பயணிகள் துறைமுகத்தின் தளத்தின் அருகில் நின்று ஆக்ரோஷமாக சீறி எழுந்த கடல் அலையை வேடிக்கை பார்த்து ஆபத்தான முறையில் செல்பி எடுத்து விளையாடி கொண்டிருந்தனர்.



Next Story