சுற்றுலா பஸ் கவிழ்ந்து 12 பேர் காயம்


சுற்றுலா பஸ் கவிழ்ந்து 12 பேர் காயம்
x

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 12 பேர் காயம்

திருப்பூர்

வெள்ளகோவில்,

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்காருபேட்டை பகுதியைச் சேர்ந்த 48 சுற்றுலா பயணிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு பஸ்சில் புறப்பட்டு தமிழகத்தில் உள்ள மேல்மருவத்தூர் மற்றும் திருச்சி பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்றனர். பின்னர் கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி இவர்களுடைய பஸ் நேற்று அதிகாலை 3 மணிக்கு திருச்சி -கோவை சாலையில் வெள்ளகோவில் அருகே வெள்ளமடை பகுதியில் சுற்றுலா பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்தது.

இதனால் பஸ்சில் பயணம் செய்த சின்னம்மாள் உள்பட 12 பேர் காயமடைந்தனர். உடனே அந்த வழியாக வந்தவர்கள் காயம் அடைந்தவர்ரகளை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Next Story