கார் கவிழ்ந்து சுற்றுலா பயணி படுகாயம்


கார் கவிழ்ந்து சுற்றுலா பயணி படுகாயம்
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-11T00:15:39+05:30)

கூடலூர்-ஊட்டி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து சுற்றுலா பயணி படுகாயம் அடைந்தார்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூரில் இருந்து ஊட்டிக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு சுற்றுலா பயணிகள் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஊசிமலை காட்சி முனை அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுமார் 15 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. தகவல் அறிந்த நடுவட்டம் போலீசார் விரைந்து வந்த மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காரில் இருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராகவேந்திரா ரெட்டி (வயது 35) என்பவரை படுகாயத்துடன் மீட்டனர். மேலும் அவரது மனைவி, குழந்தைகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். படுகாயம் அடைந்த ராகவேந்திரா ரெட்டியை கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து நடுவட்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story