புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x

புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி

உப்பிலியபுரத்தை அடுத்துள்ளது புளியஞ்சோலை. சுற்றுலாதலமான இங்கு கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டு இருந்தது. கோடைகாலமான தற்போது, அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். எனவே தடையை நீக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நேற்று தடையை நீக்கி வனத்துறையினர் உத்தரவிட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் நேற்று புளியஞ்சோலையில் குவிந்து இருந்தனர். ஆனால் அபாயகரமான நாட்டாமடு பகுதியில் பொது மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள், சிறுவர், சிறுமிகளுடன் வரும் பெற்றோர்களின் பாதுகாப்பு கருதி நாட்டாமடு பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story